தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – தம்பதியர் உட்பட 5 பேர் கைது

தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – தம்பதியர் உட்பட 5 பேர் கைது
தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – தம்பதியர் உட்பட 5 பேர் கைது

தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் மேற்பட்டவர்களிடம் தலா ரூ.3000 வாங்கி மோசடி செய்த தம்பதி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் பெஸ்ட் ப்யூச்சர் ஆஃப் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனம் கடந்த 1 வருடமாக இயங்கி வருகிறது. இங்கு தனியார் நிறுவனங்களில் ரூ 15,000 வரை மாத சம்பளத்தில் கால் சென்டர் மற்றும் சூப்பர்வைசர் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலா ரூ.3000 அட்வான்ஸ் தொகை செலுத்தியுள்ளனர்.

இதையடுத்து 2 மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு வேலையும் வழங்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கேட்டதற்கு நீங்கள் சேர்ந்ததுபோல ஆட்களை சேர்த்து விடுங்கள் அவர்கள் கொடுக்கும் பணத்தில் உங்களுக்கு கமிஷன் தருகிறோம். இதுதான் உங்கள் சம்பளம் என்று சொன்னதை கேட்டு தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேலை வேண்டாம். கட்டிய பணத்தை திருப்பித் தாருங்கள் எனக் கேட்டுள்ளனர்.

இதற்கு அந்த நிறுவனத்தை நடத்தி வரும் பிரபாகரன், சிங்காரவேலன், பூவரசி ஆகியோர் பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறி தவறான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாகிகள் 5 பேரை கைது செய்தனர். மாதிரிமங்கலத்தை சேர்ந்த நித்யா என்பவர் அளித்த புகாரின் பேரில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து கும்பகோணம் குச்சிபாளைத்தைச் சொந்த தம்பதி பிரபாகரன், பூவரசி, திருவாரூர் ராயபுரத்தைச் சேர்ந்த சிங்காரவேலு, மயிலாடுதுறை கிழாய்யைச் சோந்த சித்தார்த்தன், மணல்மேட்டைச் சோந்த விக்னேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com