சென்னையை சேர்ந்த நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் நாதெள்ளா சம்பத் நகை கடை மீது அண்மையில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். நகை முதலீடு திட்டத்தில் பணம் பெற்றுக் கொண்டு அதை முறைப்படி வழங்காமல் மோசடி செய்துவிட்டதாக புகார் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நிதி ஆதாரங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை வழங்கி எஸ்பிஐ, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று வட்டியுடன் 379 கோடி ரூபாய் வரை நாதெள்ளா நிறுவனம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.