தேனி: அதிக வட்டி தருவதாகக் கூறி 20 கோடி ரூபாய் மோசடி - நிதிநிறுவன அதிபர் கைது

தேனி: அதிக வட்டி தருவதாகக் கூறி 20 கோடி ரூபாய் மோசடி - நிதிநிறுவன அதிபர் கைது

தேனி: அதிக வட்டி தருவதாகக் கூறி 20 கோடி ரூபாய் மோசடி - நிதிநிறுவன அதிபர் கைது
Published on

தேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி 20 கோடி ரூபாய் மோசடி செய்த நிதிநிறுவன அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்த முத்துசாமியின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10 சதவிகிதம் வட்டி தருவதாகக் கூறியிருக்கிறார். இதனை நம்பி தேனி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். நிதி நிறுவனம் தொடங்கியது முதல் மூன்று மாதங்களுக்கு முறையாக வட்டி வழங்கிய நிலையில், கொரோனாவை காரணம் காட்டி, வட்டி வழங்குவதை முத்துசாமி நிறுத்தியுள்ளார்.

இயல்புநிலை திரும்பியும் வட்டி மற்றும் அசலையும் திரும்ப தராத நிலையில், நிதிநிறுவனத்தை பூட்டிவிட்டு முத்துசாமி தலைமறைவானார். எனவே, முத்துசாமியை கைது செய்து பணத்தை திரும்பப்பெற்று த்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த முத்துசாமியை கைதுசெய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com