கீரனூர் : தந்தை வாங்கிய கடனுக்காக 11 வயது மகளை கடத்திய நிதி நிறுவன ஊழியர் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தில், தந்தை வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் கடனுக்காக 11 வயது மகளை கடத்திச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள மருதூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வனத்துராஜா. கீரனூரில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். மாதந்தோறும் 2,500 ரூபாய் என்ற வகையில் தவணை முறையில் கடனை திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இந்த மாதத்துக்கான தவணைத் தொகையை அவர் செலுத்தாததால், பணத்தை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர் விக்னேஷ், வனத்துராஜாவின் வீட்டுக்கு வந்துள்ளார்.

வனத்துராஜா வீட்டில் இல்லாததால், அவரது 11 வயது மகளை அலுவலகத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டு, தவணைத் தொகையை கட்டினால் தான் விடுவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றிய புகாரின்பேரில், கீரனூர் காவல்துறையினர், சிறுமியை மீட்டு விக்னேஷை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com