போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சில நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் சென்னையில் கைது செய்யப்பட்ட 11 பேர் கொண்ட போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலிடம் நடத்தப்பட்டது விசாரணையில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிலர் வெளிநாட்டு படப்பிடிக்காக சினிமா தொழிலாளர்களை, போலி பாஸ்போர்ட்டில் அனுப்பியதும் அம்பலமாகியுள்ளது.
இறந்தவர்கள் மற்றும் விமானத்தில் அடிக்கடி செல்பவர்களின் பெயரில், போலி பாஸ்போர்ட்டுகள் தயாரிக்கப்பட்டதும் காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சிலர், பணத்தை பெற்றுக்கொண்டு 800 போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து கொடுத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.