ஐ.டி பெண் ஊழியர் கொடூர கொலை - ’வேறொரு ஆணுடன் பேசியதால் கொலை செய்தேன்’ குற்றவாளி பகீர் வாக்குமூலம்!

வேறு ஒரு ஆண் நபரிடம் பேசியதால், ஆத்திரத்தில் பிறந்த நாள் பரிசு தருவதாகக் கூறி வரவழைத்து தோழியை கொலை செய்ததாக குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
Accused
Accusedpt desk

செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் அடுத்த பொன்மார், வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு எரிந்த நிலையில் இருப்பதாக நேற்றிரவு தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தாழம்பூர் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று எரிந்த நிலையில் உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Nandhini
Nandhinipt desk

இந்நிலையில், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் மதுரையை சேர்ந்த நந்தினி (27) என்பதும், இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி நகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், காதல் விவகாரத்தில் கொடூர கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

இந்த கொடூர கொலை தொடர்பாக வெற்றிமாறன் (எ) பாண்டி மகேஸ்வரி (26) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் இன்று (24 ஆம் தேதி) நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பரிசு தர வேண்டும் என வரவழைத்து கண்களை மூடு பரிசு கொடுக்கிறேன் எனக் கூறி கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் கை, கால்களை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

Police station
Police stationpt desk

பத்தாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் நந்தினி நட்பாக பழகி வந்தார். அப்போது பெண்ணாக இருந்த நான் ஆணாக மாறினேன். இருவரும் ஒன்றாக துரைப்பாக்கத்தில் வேலை பார்த்து வந்தோம். தற்போது ராகுல் என்பவரிடம் பேசி வருவதால் என்னுடன் பேசுவதை தவிர்த்துவந்தார். இதனால் ஆத்திரத்தில் கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com