ஆவடி: வீட்டிற்குள் தஞ்சமடைந்த 7அடி நீள சாரைப் பாம்பு

ஆவடி: வீட்டிற்குள் தஞ்சமடைந்த 7அடி நீள சாரைப் பாம்பு
ஆவடி: வீட்டிற்குள் தஞ்சமடைந்த 7அடி நீள சாரைப் பாம்பு

சென்னை அருகே ஆவடியில் பெய்த கனமழை காரணமாக வீட்டிற்குள் தஞ்சமடைந்த 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. 


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு மழை அவ்வப்போது பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் எல்லாம் பரவலாக மழை பெய்தது. 


இந்த நிலையில் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் மழை காரணமாக ஒருவர் வீட்டின் சமையல் அறையில் சுமார் 7அடி நீளமுள்ள சாரைப் பாம்பு தஞ்சம் புகுந்தது. இதனை கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஆவடி தீயணைப்பு நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த வீரர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com