மனைவி மீதான சந்தேகத்தில், கோபவெறிக் கொண்டு தந்தையே குழந்தையை எரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில் மூன்று வயது குழந்தையை தந்தையே எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மீதான சந்தேகத்தில் கோபமடைந்த குழந்தையின் தந்தை இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு தீ வைத்து எரித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.