பிரிந்து சென்ற மனைவி..! தாங்க முடியாமல் இரு மகன்களை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!

பிரிந்து சென்ற மனைவி..! தாங்க முடியாமல் இரு மகன்களை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!

பிரிந்து சென்ற மனைவி..! தாங்க முடியாமல் இரு மகன்களை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!
Published on

சென்னை மதுரவாயலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரு மகன்களையும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் காமதேனு நகரில் வசித்து வருபவர் அபிப்ரகுமான். வயது 38. கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முகமது நாயிப் (வயது 6) , ரயான் (வயது 3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஆலப்பாக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே ரகுமானுக்கும் அவரது மனைவி அனிஷாவிற்கு தொடர்ந்து மன கசப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி அனிஷா ரகுமானை பிரிந்து இலங்கையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அபிப்ரகுமான் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரகுமானின் வீடு உள் தாழ் போடப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்தனர். அப்போது ரகுமான் மற்றும் அவரது இரண்டு மகன்களும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர்  மூன்று உடல்களையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர்.

மனைவி பிரிந்து சென்ற வருத்ததில் இருந்த ரகுமான் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அவ்வப்போது சென்னை வரும் ரகுமானின் மனைவி அனிஷா அவரது பிள்ளைகளை சந்தித்து சென்றுள்ளார். ஆனால் கடந்த வாரம் சென்னை வந்த அனிஷா பிள்ளைகளை கூட சந்திக்க வரவில்லை. இதனால் மனமுடைந்த ரகுமான் இரு பிள்ளைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைச் செய்து கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது. மேலும் இந்த வழக்கில் வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்கள்: நவீன், செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com