”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்

”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்

”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்
Published on

21 ஆண்டுகளாக  வளர்த்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை , தொடர்ந்து கவனித்துக் கொள்ள முடியாததால் கருணைக் கொலை செய்து விட்டேன் என தந்தை ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் நவசுதீன்.அந்த பகுதியில் சமோசா விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதில் முகமது உஷேன் என்ற மகன் இருக்கிறார்.விபரம் தெரிந்தது முதலே அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தனது ஏழ்மை நிலையிலும் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தன்னோடு வைத்தே வளர்த்து வந்திருக்கிறார் நவசுதீன். 

இந்நிலையில் , இன்று திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது மகனை கருணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் சம்சுதீன்.இதனையடுத்து அவரை வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை நவசுதீன் தெரிவித்துள்ளார்.கடந்த 10-ஆம் தேதி தமது மகனை ஆடு அறுக்கும் கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு, அஜாக்ஸ் மாணிக்கம் நகர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் மழை நீர் கால்வாயில் சடலத்தை வீசி சென்றதாகவும், இது குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10-ஆம் தேதி அந்த சடலத்தை கைப்பற்றிய திருவொற்றியூர் போலீசார், அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த பின், சடலத்தின் புகைப்படத்தை பொது இடங்களில் ஒட்டி அடையாளம் காண முயற்சித்துள்ளனர். புகைப்படத்தை பார்த்த முகமது உசேனின் உறவினர்கள் திருவொற்றியூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில், தான் போலீசில் மாட்டிக்கொள்வோம் என அறிந்ததால் நவசுதீன், வருவாய் அதிகாரிகளிடம் சரணடைந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் .தமக்கு பின் தமது மகனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தானே கருணைக் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகனை கொலை செய்ததற்காக தந்தை நவசுதீனை கைது செய்த திருவொற்றியூர் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் கருணைக் கொலை என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று என்றாலும் அதனை செய்ய பல்வேறு கடும் நெறிமுறைகள் உள்ளது. யாரும் தன்னிச்சையாக கொலை செய்து விட்டு கருணைக் கொலை என சொல்ல முடியாது. அப்படிச் செய்தால் அது கொலை. கருணைக் கொலையை பொருத்தவரை மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டு , அவர்களின் ஆய்வில் சம்பந்தப்பட்ட நபர் இனி உயிர் பிழைப்பது கடினம்  அல்லது அவர் உயிரோடு இருந்தாலும் எந்த வகையிலும் பயனில்லை என உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com