கணவருடன் வாழ வந்த மருமகளை வெட்டித் தள்ளிய மாமனார்!

கணவருடன் வாழ வந்த மருமகளை வெட்டித் தள்ளிய மாமனார்!

கணவருடன் வாழ வந்த மருமகளை வெட்டித் தள்ளிய மாமனார்!
Published on

சென்னை அருகே கணவனுடன் சேர்ந்து வாழ வந்தப் பெண்ணையும் அவர் அண்ணனையும், மாமனாரே வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் கோசலன் (65). இவர் மகன் விநாயகமூர்த்தி(28)க்கும் பெங்களூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வரலட்சுமிக்கும்(26) 4 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. 3 மாதங்களில் கணவரை பிரிந்த வரலட்சுமி பெங்களூரு சென்றுவிட்டார். இந்நிலையில் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய அவர், தன் அண்ணன் கோதண்டன் (30), அக்கா பவானி (33) மற்றும் தோழி மாலதி ஆகியோருடன் நேற்று மாலை சென்னையில் உள்ள விநாயகமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் கோசலன் இருந்தார். பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 
ஆத்திரமடைந்த கோதண்டன், கோசலனை அடித்தாராம். இதையடுத்து கோசலன் அரிவாளை எடுத்து வந்து கோதண்டனையும் வரலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார். இதில் இரண்டு பேருமே சம்பவ இடத்தில் பலியாயினர். கொலையை தடுக்க முயன்ற பவானி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தோழி மாலதி தப்பி ஓடிவிட்டார்.

அக்கம்பக்கத்தினர் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கோசலனை போலீசார் கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com