வரதட்சணை கேட்டு மருமகள், பேரக்குழந்தை மீது தீ வைத்த நபர் - குழந்தை பரிதாப உயிரிழப்பு

வரதட்சணை கேட்டு மருமகள், பேரக்குழந்தை மீது தீ வைத்த நபர் - குழந்தை பரிதாப உயிரிழப்பு

வரதட்சணை கேட்டு மருமகள், பேரக்குழந்தை மீது தீ வைத்த நபர் - குழந்தை பரிதாப உயிரிழப்பு
Published on

தேனி மாவட்டம் கம்பம் அருகே வரதட்சணை கேட்டு மருமகள் மற்றும் கைக்குழந்தையான பேரன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாராயணத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன் – சுகப்பிரியா தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே, அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன், வரதட்சணை கேட்டு மருமகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், மதுபோதையில் வீட்டுக்கு வந்த பெரியகருப்பன் வரதட்சணை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மருமகள் மற்றும் பேரன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தை உயிரிழந்த நிலையில், சுகப்பிரியா படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவருகிறார். காவல்துறையினர் பெரியகருப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com