\
‘நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா’ - மகள் கழுத்தை அறுத்த தந்தை!

‘நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா’ - மகள் கழுத்தை அறுத்த தந்தை!

‘நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா’ - மகள் கழுத்தை அறுத்த தந்தை!
Published on

விருதுநகரில் 12ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை சொந்தத் தந்தையே அறுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வில்லிப்பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருக்கிறார். 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள இந்த மாணவி, படிக்கும் போது சிவகாசியைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவரை காதலித்துள்ளார். படிப்பு ஒருபுறம் காதல் ஒருபுறம் என மாணவி இருந்ததால், படிப்பில் சரிவர மாணவி கவனம் செலுத்தவில்லை. மாணவியின் நடவடிக்கையை கண்காணித்த தந்தை, அவர் காதலிப்பதை கண்டுபிடித்துள்ளார். 

மாணவியை கடுமையாக எச்சரித்த தந்தை, அந்த இளைஞரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி அந்த இளைஞருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். தேர்வுகள் முடிந்து, விடுமுறையில் இருந்த மாணவி மீண்டும் அந்த இளைஞருடன் பேச ஆரம்பித்துள்ளார். எந்தக் கல்லூரியில் சேருவது என்பது தொடர்பாக அந்த இளைஞர், மாணவியிடம் பேசியதாக கூறப்படுகிறது. தனது மகள் மீண்டும் அந்த இளைஞருடன் பேசுவதை அறிந்த தந்தை, ஆத்திரமடைந்துள்ளார். 

இந்நிலையில் தனது மகளை அடித்த முனியாண்டி, “நீ சொன்னால் திருந்த மாட்டாயா? நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா? நீ இனி இருக்கக்கவே கூடாது” என திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேற, கத்தியை எடுத்து தனது மகளின் கழுத்தை அறுத்துள்ளார் முனியாண்டி. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து முனியாண்டியை தடுத்துள்ளனர். இதையடுத்து மாணவி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com