சொந்த மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

சொந்த மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை
சொந்த மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 14 வயது மகளை நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர், கோத்தர்வயல் பகுதியைச் சேர்ந்த அப்துல் நாசர் என்பவரின் 14 வயது மகள், தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் கேரளாவில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்ற அந்த சிறுமி, கூடலூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்ப மறுத்துள்ளார். அவரது உறவினர்கள் பெண்ணை விசாரித்த போது, அவரது தந்தையே கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

நடந்ததை வெளியே சொன்னால், தாய் மற்றும் சகோதரனை கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதையடுத்து, நடந்ததை வெளியில் சொல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் இன்று கூடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், அப்துல் நாசரை கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துவருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், தினசரி பாலியல்கொடுமை குற்றங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர வைக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com