\
அந்தியூர்:  பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது...!

அந்தியூர்: பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது...!

அந்தியூர்: பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது...!
Published on: 

அந்தியூர் அருகே 2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்கு திருமணம் ஆகி 11 வயதில் மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 65 நாட்கள் கடந்த நிலையில் மனைவி மகளிர் குழுவிற்கு பணம் செலுத்த சென்றுள்ளார்.

அப்போது குழந்தையை கவனித்து கொள்ளும்படி கணவர் துளசிமாதனிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து மனைவி திரும்பி வந்து பார்த்தபோது பெண் குழந்தையை கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட தாய் அருகில் உள்ள ஆலாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே குழந்தையின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார், குழந்தைக்கு துளசிமாதன் பாலியல் தொந்தரவு கொடுத்ததை உறுதி செய்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துளசிமாதனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com