கோவையில் ஃபரூக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.
கடந்த 16-ஆம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஃபரூக் கோவையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனிடையே, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்புக் கருத்துகளைப் பரப்பி வந்ததால் ஃபரூக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அன்சத், சதாம் உசேன், சம்சுதீன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில், அக்ரம், ஜாபர், முனாப் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் இன்று காலை நீதிபதி செல்வக்குமார் வீட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களை ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.