மின்கம்பிகள் திருடப்பட்டதால் வாடும் பயிர்கள்... அரசு சீரமைத்துதர விவசாயிகள் கோரிக்கை

மின்கம்பிகள் திருடப்பட்டதால் வாடும் பயிர்கள்... அரசு சீரமைத்துதர விவசாயிகள் கோரிக்கை
மின்கம்பிகள் திருடப்பட்டதால் வாடும் பயிர்கள்... அரசு சீரமைத்துதர விவசாயிகள் கோரிக்கை

விவசாய நிலத்திற்கு செல்லும் 1 கிலோ மீட்டர் மின்சார கம்பிகள் திருடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மின்சார பின்னடைவால், 10-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த விழுதுபட்டு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) அதிகாலையில் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றபோது, மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு திருடப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்டதட்ட 12க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் மின்சார கம்பிகள் திருடப்பட்டுள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக விவசாயிகள் மின்சாரக் கம்பிகள் திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரம் கிடைக்காததால், கிணறுகளில் இருந்து நீரை இறைக்க முடியாமல் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சூழல் உருவாகியுள்ளது.

விளைநிலங்களில் பயிரிட்ட நெல், மணிலா, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் மின்சாரம் இல்லாமல் வாடுவதை தொடர்ந்து, இது சம்பந்தமாக மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை திருடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மின்சார கம்பிகளை சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com