
தெலுங்கானா மாநிலம் மஹபூப் மாவட்டத்தில் உள்ள ராஜாப்பூர் - திருமலபூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கதி நரசிம்மலு. 35 வயதான அவர் அந்த பகுதியில் நடந்து வந்த மணல் கொள்ளையை தடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அண்மைய காலமாக நரசிம்மிலுவின் நிலத்திலிருந்து கடத்தல்காரர்கள் மணலை கடத்தி சென்றுள்ளனர். அதனை அறிந்து கொண்ட அவர் பலமுறை அந்த கடத்தலை தடுக்கவும் முயன்றுள்ளார். தன் நிலத்தில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து போலீசிலும் புகார் கொடுத்துள்ளார் அவர். ஆனால் அதன் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
நேற்று இரவு அவரது நிலத்தில் மீண்டும் கடத்தல்காரர்கள் லாரியை பயன்படுத்தி மணலை கடத்தியுள்ளனர். அதனை தடுக்க நரசிம்முலு முற்பட்ட போது அவர் மீது மணல் கடத்த பயன்படுத்திய லாரியை ஏற்றி கொலை செய்துள்ளனர் கடத்தல்காரர்கள். அடையாளம் தெரியாத அளவுக்கு அவரது உடல் நசுங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.