ஹரியானா | ”அடுத்த 5 நிமிடத்தில் செத்துடுவோம்” ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் மிட்டல். இவர் தனது பெற்றோர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் காரில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார் கதவை உடைத்து மயங்கி கிடந்த 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் 7 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், சடலங்கள் காரில் இருந்து மீட்கப்பட்ட போது, கடிதம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.அந்த கடிதத்தில் அதிகளவு கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக விஷம் குடித்து 7 பெரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.