விருத்தாசலம் அருகே போலி பெண் டாக்டர் கைது

விருத்தாசலம் அருகே போலி பெண் டாக்டர் கைது

விருத்தாசலம் அருகே போலி பெண் டாக்டர் கைது
Published on

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் மருந்தாளுநருக்கு படித்துவிட்டு, மருத்துவம் பார்ப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து விருத்தாசலம் முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பிரேமலதா மருத்துவம் பார்த்ததை உறுதி செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து பிரேமலதாவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவர் போலி மருத்துவம் பார்த்ததாக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com