போலீஸ் எனக்கூறி 5 பவுன் நகை, ரூ.75,000 பணம் திருட்டு: காவல்துறை விசாரணை

போலீஸ் எனக்கூறி 5 பவுன் நகை, ரூ.75,000 பணம் திருட்டு: காவல்துறை விசாரணை
போலீஸ் எனக்கூறி 5 பவுன் நகை, ரூ.75,000 பணம் திருட்டு: காவல்துறை விசாரணை

போலீஸ் எனக்கூறி சோதனை செய்வதுபோல் நாடகமாடி 5 பவுன் நகை மற்றும் ரூ.75,000 பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சூலூர் கலங்கல் பாதையில் குருவம்மாள் நகர் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் திலகம். இவரது மகன் கவியரசன் கடை வியாபாரத்தைக் கவனித்து வருகிறார். இவர்கள், தங்கள் கடையின் எதிரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கவியரசு மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் 1 மணியளவில் வெள்ளை நிற காரில் 4 பேர் வந்துள்ளனர். வந்தவர்கள் தாங்கள் போலீஸ் எனவும் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது எனவும்கூறி, கடையை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

காரில் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் 3 பேர் கடைக்குள் சென்று சோதனையிட்டுள்ளனர். கடையில் செய்த சோதனையில் குட்கா ஏதும் கிடைக்காத நிலையில் உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி எதிரில் உள்ள வீட்டிற்கு கவியரசனை அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது அவரிடமிருந்த செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். வீட்டிலும் எதுவும் கிடைக்காததால் கவியரசனை அவரை காரில் ஏற்றி உட்காரவைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றபின் காரிலிருந்து இறக்கி விட்டுள்ளனர்.

நடந்து வீட்டிற்கு வந்த கவியரசன் தனது தாயிடம் நடந்ததைக் கூறியுள்ளார். காரில் வந்தவர்கள் தன்னை சிறிது தூரம் அழைத்துச் சென்று இறக்கிவிட்டதால் சந்தேகமடைந்த கவியரசு வீட்டில் பணம் வைத்திருந்த பையைப் திறந்து பார்த்துள்ளார். அப்போது பையிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸ் எனக்கூறி வந்தவர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீஸ் எனக்கூறி நடித்தவரகள் வந்து சென்ற காரின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com