தமிழகத்தில் மேலும் 5 போலி ஹோமியோபதி மருத்துவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலுக்கு புகார் கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒருசிலர் ஹோமியோபதி மருத்துவம் படிக்காமல், ஏற்கனவே சான்றிதழ் வைத்திருப்பவர்களிடம் சான்றிதழை பெற்று அதில் அவர்கள் பெயரை நீக்கி விட்டு தங்களது பெயரை எழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தஞ்சையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கடலூர், தேனி மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.