\
வீட்டிற்கு தெரியாமல் கருவை கலைத்த இளம்பெண் உயிரிழப்பு: போலி மருத்துவரும் சிக்கினார்..!

வீட்டிற்கு தெரியாமல் கருவை கலைத்த இளம்பெண் உயிரிழப்பு: போலி மருத்துவரும் சிக்கினார்..!

வீட்டிற்கு தெரியாமல் கருவை கலைத்த இளம்பெண் உயிரிழப்பு: போலி மருத்துவரும் சிக்கினார்..!
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருக்கலைப்பு செய்ததால் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், போலி பெண் மருத்துவர் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் ஜீவா. கல்லூரியில் படித்து வந்துள்ளார். திருமணமாகாத ஜீவா கருவுற்றதாக கூறப்படும் நிலையில், தன்னுடைய வீட்டிற்கு தெரியாமல் கருவை கலைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து காடையாம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி கிராமத்தில் உள்ள பெண் போலி டாக்டர் சுல்தானா என்பவரிடம் சென்று மாணவி ஜீவா கருவை கலைத்ததாக தெரிகிறது.

பின்னர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட ஜீவா, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் வளர்மதி, சுல்தானா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலி பெண் மருத்தவரை கைது செய்த தீவட்டிப்பட்டி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே போலி மருத்துவர் சுல்தானாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மருத்துவர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com