\
பேஸ்புக்கில் விமர்சனம்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது!

பேஸ்புக்கில் விமர்சனம்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது!

பேஸ்புக்கில் விமர்சனம்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது!
Published on

நீதிபதிகள் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் மீம்ஸ்கள் மற்றும் அவதூறு கருத்துகளை பதிவிடுகின்றனர் என்று, அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் முகநூல் பக்கத்தில்  கருத்து தெரிவித்தாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளாட்சித் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் ​முகநூலில் தவறான கருத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல், நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்ததாக கூறி முருகன் என்ற அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com