நடிகர் ஷாருக்கான் மகனின் போதைப்பொருள் வழக்கை கையாண்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் மீதான போதை பொருள் வழக்கை கையாண்ட அதிகாரி சமீர் வான்கடேயவிற்கு எதிராக சிபிஐ ஊழல் வழக்கினை பதிவு செய்துள்ளது.
Aryan Khan
Aryan KhanPT Desk

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானையும், இது தொடர்பான மேலும் 19 பேரையும் மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைவராக இருந்த சமீர் வான்கடே கைது செய்திருந்தார். பின்னர் இது தொடர்பாக நடந்த வழக்கில் ஆரியன் கான் நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.

Aryan Khan
Aryan KhanTwitter

அதே வேளையில் சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையின் போது ஆரியன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க 50 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், அதற்கு 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் ஏற்கெனவே தானே காவல் துறையும் ஊழல் புகார் குற்றச்சாட்டினை தனி வழக்காக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com