\
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த  7 பேர் கைது
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைதுpt desk

ஈரோடு: சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது

ஈரோடு அருகே உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பெண் உள்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளதாக பெருந்துறை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

arrested
arrestedpt desk

இதில் அனோவர் ஹசைன் (43), அலிசேக் (28), ஓய்யுல்லா (28), பாதிமா (22), சஞ்சுசோசன் (31), பரூக்கோசன் (35) மற்றும் முகமது மோன்ஜல் (48) ஆகியோர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த  7 பேர் கைது
திருவாரூர்: கணவர் உயிரிழந்த நிலையில் பிறந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பெண்

இதனையடுத்து ஏழு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com