நீ குளிக்கிற வீடியோ இருக்கு... வெளிய சொன்னா கொண்ணுடுவேன்! - இளம் பெண்ணை மிரட்டியவன் கைது
ஈரோட்டில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் இரவு வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியலறையின் துவாரம் வழியே வெளிச்சம் வருவதை கண்டு சந்தேகமடைந்த இளம்பெண் வீட்டு மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது எதிர்வீட்டு மாடியில் வசித்து வரும் கண்ணன் என்ற இளைஞர், இளம்பெண்ணை துரத்தியுள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணின் வீட்டிற்குள் சென்ற கண்ணன், கத்தி முனையில் அந்த இளம்பெண்ணிடம், நீ குளிக்கும் வீடியோக்கள் இருப்பதாகவும் எனவே தனது ஆசைக்கு இணங்கும்படியும் இல்லையெனில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் அச்சமடைந்த இளம்பெண், கூச்சலிட்டதை அடுத்து கண்ணன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தெற்கு காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கண்ணனை பிடித்து அத்துமீறி நுழைதல், ஆபாச படம் எடுத்தல் மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.