\
ஈரோடு: நகை வாங்குவதுபோல் நடித்து தங்க காசுகள் திருட்டு: இரண்டு பெண்கள் கைது

ஈரோடு: நகை வாங்குவதுபோல் நடித்து தங்க காசுகள் திருட்டு: இரண்டு பெண்கள் கைது

ஈரோடு: நகை வாங்குவதுபோல் நடித்து தங்க காசுகள் திருட்டு: இரண்டு பெண்கள் கைது
Published on

ஈரோட்டில் நகை வாங்குவதுபோல் நடித்து தங்க காசுகளை திருடிச் சென்ற இரண்டு பெண்களை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ஈரோடு காவிரி சாலையில் பிரபல தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு கிராம் தங்க காசுகள் காணவில்லை என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தங்க காசுகள் வாங்குவதுபோல் நடித்து இரண்டு பெண்கள் திருடி செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விழுப்புரத்தைச் சேர்ந்த புஷ்பா மற்றும் பானுமதி ஆகிய இரண்டு பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com