\
ஈரோடு: கத்தியால் தாக்கி நகை மற்றும் பணம் பறிப்பு: சிறுவர் உட்பட 3 பேர் கைது

ஈரோடு: கத்தியால் தாக்கி நகை மற்றும் பணம் பறிப்பு: சிறுவர் உட்பட 3 பேர் கைது

ஈரோடு: கத்தியால் தாக்கி நகை மற்றும் பணம் பறிப்பு: சிறுவர் உட்பட 3 பேர் கைது
Published on: 

ஈரோட்டில் மதுபோதையில் கத்தியால் தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீரப்பன் சத்திரம் அடுத்து சின்னவலசு பகுதியைச் சேர்ந்தவர் ஜான். இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜான் குடியிருந்த வீட்டை காலி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர், போதையில் ஜானிடம் தவறாக பேசி கத்தியால் தாக்கி 2 பவுன் தங்க செயின், வெள்ளி செயின் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கேஸ் அடுப்பு ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் ஜான் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வெங்கடேஷ், சரத்குமார் மற்றும் சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செயின்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com