பெட்ரோல் கேட்பதுபோல் நடித்து செல்போனை பறித்துச் சென்ற நபர்கள்
கவுந்தப்பாடி அருகே பெட்ரோல் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு காஞ்சிக்கோயில் அருகே கவுந்தப்பாடி சாலையில் பக்தனராஜா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த மூன்று நபர்கள் பெட்ரோல் கேட்பது போல் நடித்து பக்தனராஜா-வை நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் வண்டியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். பிறகு செல்போனை மட்டும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காஞ்சிகோயில் போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுவன் உள்பட காஞ்சிகோயிலைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த யாசின் முகமதுஅலி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.