ஈரோடு: வங்கி ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக மூவர் கைது

ஈரோட்டில் வங்கி ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பிடுங்கியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் லோன் ஏஜென்சி தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் தினேஷை தகாத வார்த்தைகளால் திட்டி பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

Police station
Police stationpt desk

இதனால் பயந்த தினேஷ் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தினேஷ் வடக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, சுள்ளான் விக்கி என்கிற விக்னேஷ்குமார், பிரவின்குமார் மற்றும் தீபன் ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர்.

Accused
மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்.. ஆனாலும் காதலிக்கு செலவு செய்ய நகைக்கடையில் திருடி வசமாக சிக்கிய இளைஞர்!

இதில், சுள்ளான் விக்கி மீது ஏற்கனவே பத்து குற்ற வழக்குகளும், பிரவின்குமார் மீது மூன்று வழக்குகளும், தீபன் மீது ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com