ஈரோடு: சிறுமியை திருமணம் செய்த கட்டட தொழிலாளி; 6 பேர் போக்சோவில் கைது

ஈரோடு: சிறுமியை திருமணம் செய்த கட்டட தொழிலாளி; 6 பேர் போக்சோவில் கைது

ஈரோடு: சிறுமியை திருமணம் செய்த கட்டட தொழிலாளி; 6 பேர் போக்சோவில் கைது
Published on

சிறுமியை திருமணம் செய்த கட்டடதொழிலாளி உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (30). கட்டட தொழிலாளியான இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்மதத்துடன் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டிஎன் பாளையத்தில் சிறுமிக்கும் சுப்பிரமணியத்துக்கும் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து உறவினர் மூலம் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சத்தியமங்கலம் மகளிர் காவல் ஆய்வாளர் இந்திராணி சோபிகா விசாரணை நடத்தினர். சிறுமியை சுப்பிரமணியம் திருமணம் செய்தது உறுதியானதால் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக கணவர் சுப்பிரமணியம், இவரது பெற்றோர் பழனியப்பன் (65), பொன்னம்மாள் (55), சிறுமியின் தாயார் சித்தா (38), அத்தை சரளா, மாமா முத்து (40) ஆகியோரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு உதவிபெறும் காப்பக்தில் சேர்க்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com