சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
ஆந்தியூர் அருகே பால் கடையில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி, அருமைக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராசுகவுண்டர் என்பவரின் மகன் தாமோதரன் (27), இவர், அந்தியூர் பகுதியில் பால்கடை ஒன்றை நடத்தி வருகிறார், பால் கடை நடத்துவதற்கு முன்பு மற்றொரு பால் கடைக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த தாமோதரன் அங்கு வேலைக்கு வந்த சிறுமியிடம் பழகி பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
இதையடுத்து தாமோதரன் குறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் தாயார் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், தாமோதரனை கைது செய்து ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.