\
ஈரோடு: வாடகை வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக கணவன், மனைவி கைது

ஈரோடு: வாடகை வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக கணவன், மனைவி கைது

ஈரோடு: வாடகை வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக கணவன், மனைவி கைது
Published on

சத்தியமங்கலம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி புஞ்சைபுளியம்பட்டி நல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது கேவிகே வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அந்த வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கோவை மாவட்டம் ஆலபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மோகனா என்பதும் கணவன் மனைவியான இருவரும் சேர்ந்து நல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தைச் சேர்ந்த 32 வயதான பெண்ணை போலீசார் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com