\
பாலியல் புகார் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பாலியல் புகார் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பாலியல் புகார் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
Published on

பாலியல் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் ஈரோடு சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சீனாபுரத்திலுள்ள அரசு பள்ளி உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பெற்றோர்கள் கொடுத்த புகாருக்கும், மாணவிகள் கொடுத்த புகாருக்கும் தலைமை ஆசிரியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே தலைமை ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தியும் மாணவர்கள், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com