\
ஈரோடு: சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக இளைஞர் கைது; தந்தையும் சிக்கினார்

ஈரோடு: சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக இளைஞர் கைது; தந்தையும் சிக்கினார்

ஈரோடு: சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக இளைஞர் கைது; தந்தையும் சிக்கினார்
Published on: 

ஈரோடு அருகே 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக இளைஞர் மற்றும் அவரின் தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் முருகேசன். எலக்ட்ரீசியன் வேலை பார்ககும் இவர், ஈரோடு அருகே வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்திய முருகேசன் தனது தந்தை ரத்தினத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து வெள்ளோடு காவல் நிலையத்திற்கு வந்த அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகேசன் மற்றும் அவரது தந்தை ரத்தினம் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com