ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!
Published on

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்ற வழக்கில் அச்சிறுமியின் தாய் இந்திராணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு குழந்தை நல காப்பத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை ( ஜூன் 30ம் தேதி) ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு காப்பகத்தில் இருந்த சிறுமி கழிவறை சுத்தம் செய்யும் கிருமி நாசனி குடித்து தற்கொலைக்கு முயற்சித்தாகவும் அவரை காப்பக ஊழியர்கள் காப்பாற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கருமுட்டை விவகார வழக்கை விசாரத்து வரும் ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தற்போது சிறுமி நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்கின் பின்னணி:

சிறுமிக்கு 3 வயதுள்ள போது கணவர் சரவணன் பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவதாக சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தாய் இந்திராணி. தாய் இந்திராணி ஏற்கெனவே கருமுட்டை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக டெய்லரான மாலதி இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் கருமுட்டைகளை தருமபுரி, ஒசூர், ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். மீண்டும் சிறுமியிடம் கருமுட்டை எடுக்க தயாரானபோது சிறுமி தனது சித்தியிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சித்தி, சிறுமியுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜூன் 1ம் தேி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த வழக்கில் ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராணி, சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் வயதை ஆதாரில் உயர்த்தி காட்டிய ஜான் என்பரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com