சட்டவிரோத மது விற்பனை முயற்சி – ஒருவர் கைதுpt desk
குற்றம்
ஈரோடு | சட்டவிரோத மது விற்பனை முயற்சி – ஒருவர் கைது... 192 மது பாட்டில்கள் பறிமுதல்
ஈரோடு அருகே சட்டவிரோத மது விற்பனைக்காக காரில் கொண்டு சொல்லப்பட்ட 192 மது பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் யசோதரன் என்பவர் வசித்து வருகிறார். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பெருந்துறை டாஸ்மாக் கடைகளில் 192 மதுபாட்டில்களை வாங்கி தனது காரில் கொண்டு சென்றுள்ளார்.
arrestedfreepik
அப்போது ஈரோடு மதுவிலக்கு காவல்துறையினர் சித்தோடு பேருந்து நிறுத்தத்தில் ரகசிய தகவலின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து காரில் வந்த யசோதரனை பிடித்து அவரின் காரில் இருந்த மது பாட்டில்களையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் யசோதரனை கைது செய்துள்ளனர்.