\
ஈரோடு: சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ1000 அபராதம்

ஈரோடு: சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ1000 அபராதம்

ஈரோடு: சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ1000 அபராதம்
Published on: 

ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு அருகே மலையம்பாளையத்தில் ஜெராக்ஸ் வேலை செய்து வருபவர் சுபாஷ். இவர், கடந்த 2019ம் ஆண்டு தனது கடை முதலாளியின் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் தந்தை சுபாஷை பிடித்து மலையம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட சுபாஷை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், 5 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com