\
ஈரோடு: இருசக்கர வாகன பெட்டியை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ஈரோடு: இருசக்கர வாகன பெட்டியை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ஈரோடு: இருசக்கர வாகன பெட்டியை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
Published on: 

ஈரோட்டில் இருசக்கர வாகன பெட்டியை நூதன முறையில் திருடி வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பூந்துறை சாலையில் முள்ளாம்பரப்பு என்ற இடத்தில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் இருந்த 2.5 பவுன் தங்க நகை மற்றும் 1500 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போனது.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அண்மையில் இதேபோல் கருங்கல்பாளையத்தில் 5 பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவல்பூந்துறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7.5 பவுன் தங்க நகைகளை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com