ஈரோடு: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை - நகைகள் திருட்டு

ஈரோடு: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை - நகைகள் திருட்டு

ஈரோடு: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை - நகைகள் திருட்டு
Published on

ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகைகளை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், 62 வயதான மூதாட்டி மணிமேகலை. சில ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், மணிமேகலை வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிமேகலையை சந்திப்பதற்காக அவரது மகள் ராணி வந்தபோது வீடு பூட்டியிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிமேகலை சடலமாக கிடந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ராணி உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி மணிமேகலை அணிந்திருந்த 7 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com