பணத்திற்கு பேட்ஜ் - 10 கோடி ஊழலில் ஆர்டிஓ அதிகாரிகள்

பணத்திற்கு பேட்ஜ் - 10 கோடி ஊழலில் ஆர்டிஓ அதிகாரிகள்

பணத்திற்கு பேட்ஜ் - 10 கோடி ஊழலில் ஆர்டிஓ அதிகாரிகள்
Published on

பணத்திற்காக போலியான கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு 6,777 பேருக்கு பேட்ஜ் வழங்கியதில் 10 கோடியே 16 இலட்சத்து 55 ஆயிரம் ஊழல் செய்துள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு உள்ளிட்ட 7 வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது, இதில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதாக மதுரையை சேர்ந்த செந்தில் கண்ணன் என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்,

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2015 – 2016 ஆம் ஆண்டு போலியான பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு 6,777 பேருக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்க்காக ஒவ்வொருவரிடமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என மொத்தமாக 10 கோடியே 16 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று உள்ளதாகவும் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அப்போதைய மதுரை வடக்கு போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் உள்ளிட்ட 6 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் 11 ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என மொத்தமாக 17 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com