குடிபோதையில் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் !
குடிபோதையில் 15 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீபாவளியன்று இரவு குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் வீட்டில் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: ”நான் எனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குருங்ரம் ஃபரூக்நகரில் வசித்து வருகிறேன். எனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.
தீபாவளியன்று நானும் என் மகனும் பூஜையை முடித்துவிட்டு மது அருந்தினோம். என்னுடைய மூத்த மகளும் இளைய மகளும் ஒரு அறையில் தூங்கினர். எனது 15 வயது கடைசி மகள் தனியாக மற்றொரு அறையில் தூங்கினாள்.
நான் அன்று மிகவும் அதிகமாக மது அருந்திவிட்டதால் எனது தனி அறையில் தூங்கி விட்டேன். அதன் பின் என்னுடன் மது அருந்திய எனது மகன் தனியாக தூங்கிக்கொண்டிருந்த கடைசி மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான். இந்த சம்பவத்தை அடுத்த நாள் காலை மகள் என்னிடம் சொன்னாள்”. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவனையில் சேர்த்தனர். அதில் அவள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் அண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.