குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: லோடுமேன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: லோடுமேன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: லோடுமேன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது
Published on

திண்டுக்கல்லில் குடிபோதையில் தலையில் கல்லை போட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் அருள் விசுவாசம் (34). லோடுமேனாக வேலைபார்க்கும் இவர், நேற்றிரவு திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கிய ஸ்டீபன் மற்றும் குறசெபஸ்டியன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.

அப்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபஸ்டியான் ஆகிய இருவரும் சேர்ந்து அருள் விசுவாசத்தின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலைய போலீசார், ஆரோக்கிய ஸ்டீபன், குறசெபஸ்டியன் ஆகய இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து அருள் விசுவாசத்தின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com