\
ஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய ரூ.28 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பி ஓட்டம்

ஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய ரூ.28 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பி ஓட்டம்

ஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய ரூ.28 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பி ஓட்டம்
Published on

சென்னை விமான நிலைய ஏடிஎம் வாசலில் 28 லட்ச ரூபாய் ரொக்கத்துடன் தலைமறைவான பணப்பட்டுவாடா நிறுவன வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையம் அருகே கனரா வங்கியின் ஏடிஎம் உள்ளது. அதில் பணம் நிரப்ப வாகனத்தில் வந்த அதிகாரிகள் ஏடிஎம்மின் ஷட்டரை கீழிறக்கிவிட்டு உள்ளே பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேறு ஏடிஎம்களில் நிரப்புவதற்கு வாகனத்தில் இருந்த 28 லட்ச ரூபாயுடன் ஓட்டுநர் வாகனத்தை ஓட்டிச் சென்று விட்டார். வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பணத்துடன் தலைமறைவான ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி அருகே வாகனத்தை விட்டுச் சென்றது தெரிய வந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஓட்டுநரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com