பொதுமக்கள் முன்பு அரிவாளால் வெட்டி இருவர் படுகொலை

பொதுமக்கள் முன்பு அரிவாளால் வெட்டி இருவர் படுகொலை

பொதுமக்கள் முன்பு அரிவாளால் வெட்டி இருவர் படுகொலை
Published on

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு பேர் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டனர். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போல்பேட்டையில் எஸ்.எஸ் தெருவை சேர்ந்த ஜெயலிங்கம் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையின் எதிரில் சென்ற இவரை சுற்றி வளைத்த நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதைக் கண்ட டிரை சைக்கிள் ஒட்டுநர் பண்டாரம் என்பவர் தடுக்க முயன்றார். அந்தக் கும்பல் அவரையும் வெட்டியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஜெயலிங்கத்திற்கு சொந்தமான வீட்டிலிருந்தவரை காலி செய்ய சொன்னதால் இந்த கொலை நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com