திமுக கொறடாவின் நகை, பணம் திருட்டு - ஓடும் ரயிலில் துணிகரம்

திமுக கொறடாவின் நகை, பணம் திருட்டு - ஓடும் ரயிலில் துணிகரம்

திமுக கொறடாவின் நகை, பணம் திருட்டு - ஓடும் ரயிலில் துணிகரம்
Published on

ஓடும் ரயிலில் இருந்து திமுக கொறடாவின் நகை, பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கொறடாவாக இருப்பவர் சக்கரபாணி. இவர் நேற்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.

அப்போது இரவு நேரம் என்பதால் நன்றாக தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்க்கும் போது தான் எடுத்துவந்த பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியுற்றார். அதன்மூலம் பேக்கில் இருந்த பணம், நகை, செல்போனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் பேக்கில் 2 சவரன் மோதிரமும், ஒரு லட்சம் ரூபாயும், செல்போனும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஓடும் ரயிலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com