திமுக கவுன்சிலர் கைதுpt desk
குற்றம்
விருதுநகர்: வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கு - தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர்: நவநீத கணேஷ்
பாஸ்கரன் என்ற வழக்கறிஞர், காரில் அமர்ந்திருந்த போது அவர் மீது 3 பேர் கொண்ட கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவரிடமிருந்து 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.
Police stationpt desk
முன்விரோதம் காரணமாக திமுக கவுன்சிலர் மணி முருகன் தூண்டுதலின் பேரில் பாண்டி, அன்பு கணேஷ், விக்னேஷ் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக பாஸ்கரன் தரப்பினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையை தொடர்ந்து இக்கும்பலைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர் மணிமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.