குற்றம்
ஈரோடு: நாதஸ்வர வித்துவான் அடித்துக் கொலை; இருவர் கைது
ஈரோடு: நாதஸ்வர வித்துவான் அடித்துக் கொலை; இருவர் கைது
சத்தியமங்கலம் அருகே நாதஸ்வர வித்வான் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தவில் வித்துவான்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாதஸ்வர வித்துவான் பழனிச்சாமி. இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள பாறை புதூர் என்ற இடத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அதே ஊரைச் சேர்ந்த தவில் வித்வான்கள் சின்னமணி மற்றும் ராமராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நாதஸ்வர வித்துவான் பழனிச்சாமியை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த புஞ்சை புளியம்பட்டி போலீசார், இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.