கோவை அடுத்த சூலூரில் சில்லறை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் மீது உணவக ஊழியர் கொதிக்கும் எண்ணெயை கொட்டியுள்ளார்.
சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்த தீபக், திலீப் உள்ளிட்ட நான்கு மாணவர்கள், அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் வேலை செய்யும் தள்ளுவண்டி கடைக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது சாப்பிட்டதற்கு ஆன பணத்தை மாணவர்கள் அளித்தபோது சில்லரை தருவதில் தகராறு ஏற்றபட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கும், கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மாணவர்கள் மீது கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து கொட்டியுள்ளார். இதனால் காயமடைந்த மாணவர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.